துபாயை இரண்டாவது தாயகமாக உணர்கிறேன் எனக்கூறிய விஜய் சேதுபதி..!
துபாயில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதிக்கு சினிமா துறையில் செல்வாக்குமிக்க நட்சத்திர விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேடையில் பேசிய விஜய் சேதுபதி நான் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் பெரிய பெரிய லட்சியத்தோடு தான் 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் துபாய்க்கு வந்திருந்தேன் என்றும் கூறியுள்ளார்.
இங்கு வந்ததன் பின் இது ஒரு புது நாடு வெளிநாடு என்கிற ஃபீலிங் இல்லவே இல்லை எனவும் பேசியுள்ளார். அது மட்டுமில்லாமல் துபாயை தன்னுடைய இரண்டாவது தாய் நாடாக நினைக்கிறேன் எனவும் கூறியுள்ளார். இப்பொழுது அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.






