--- --:--:-- --

ஒரே நாளில் 10 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்…!

7

நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒரே நாளில் வெவ்வேறு தடுப்பூசி மையங்களுக்கு சென்று பத்து தடுப்பூசியை எடுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா பெருந்தொற்றில் இருந்து தப்ப ஒரே வழியாக அரசு கால இடைவெளியில் 2 நோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

 

சில நாடுகள் மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளையும் எடுக்க கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கும் மீறி தடுப்பூசி எடுத்துக்கொள்வது உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் உயிர் போகும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

 

இந்நிலையில் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒரே நாளில் வெவ்வேறு தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டுள்ளார். நல்லவேளையாக அந்த நபருக்கு உடல்நல பாதிப்பு எதுவும் தற்போதைக்கு ஏற்படவில்லை.

 

இந்த தகவல் அறிந்து அந்த நபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon