போதையில் மயங்கி கிடந்த மாப்பிள்ளை..! திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..!
தர்மபுரி அருகே மது போதையில் மாப்பிள்ளை மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார். கூலித்தொழிலாளி சரவணனுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு வந்த பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு மாப்பிள்ளை மற்றும் உறவினர்கள் யாரும் காணவில்லை. உடனடியாக கிராமத்திற்கு சென்று பார்த்த போது மணமகன் மது போதையில் மயங்கிக் கிடந்துள்ளார்.
எனவே திருமணத்தை நிறுத்தியதோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.






