மது அருந்திய இருவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு..!
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மது அருந்திய சிறிது நேரத்தில் இருவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தனர். ஓமலூர் அடுத்த தாராபுரத்தை சேர்ந்த முதியவர் தக்ஷிணாமூர்த்தி மற்றும் ராமன்.
இவர்கள் இருவரும் கள்ளச்சந்தையில் மது வாங்கி வந்து குடித்த நிலையில் சிறிது நேரத்தில் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






