மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்று நாடகமாடிய கணவன்..!
சென்னையில் பல பெண்களுடனான தனது தொடர்பு குறித்து மனைவிக்கு தெரிய வந்ததால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டார்.
வினோத்குமார் என்று அந்த நபர் நேற்றிரவு தனது மனைவி திடீரென மயங்கி விட்டதாக கூறி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்து இருந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் போலீசில் புகார் அளித்தார். திருமணத்திற்கு முன்பு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது திருமணத்திற்குப் பிறகுதான் தெரிய வந்ததாகவும் திருமணம் ஆன பிறகும் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த வினோத்குமார் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக புகார் தெரிவித்துள்ளார்.
போலீஸ் விசாரணையில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.






