--- --:--:-- --

படத்தின் காட்சிகளை செல்போனில் படம் பிடிக்க வேண்டாம்: வெங்கட்பிரபு

8

தியேட்டரில் படம் பார்க்கும் பொழுது தயவுசெய்து படத்தின் காட்சிகளை செல்போனில் படம் பிடிக்க வேண்டாம் என இயக்குனர் வெங்கட்பிரபு கேட்டுள்ளார். நடிகர்கள் சிலம்பரசன், எஸ்ஜ் சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு.

 

இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இந்நிலையில் வெங்கட்பிரபு, திரைப்படத்தின் மீது நீங்கள் அனைவரும் வெளிப்படுத்தும் அன்புக்கு நன்றி என்றும் இந்த திரைப்படத்தில் காட்சிகளை செல்போனில் படம் பிடித்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் எனவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon