ஒமிக்ரான் வைரசின் அறிகுறிகள் என்ன..? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்..!
கொரொனாவின் புதிய வடிவமான ஓமிக்ரான் வைரசின் அறிகுறிகள் என்னவென்று மருத்துவ நிபுணர்கள் விளக்கியுள்ளனர். அளவுக்கு அதிகமான சோர்வு, தசைகளில் வலி, கரகரப்பான தொண்டை, வறட்டு இருமல் ஆகியவை இதன் அறிகுறியாகும்.
ஒமைக்ரான் வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தென்னாப்பிரிக்க மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இதுவரை கண்டறியப்பட்ட பாதிப்புகள் அனைத்தும் மிதமான பாதிப்புகள் தான் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால் மருத்துவமனை செல்ல வேண்டிய அவசியம் நோயாளிக்கு ஏற்படவில்லை என்றும், கடந்த 10 நாட்களில் 30 பேருக்கு சிகிச்சை அளித்த மூத்த பெண் மருத்துவர் தெரிவித்துள்ளார்.






