93 அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை ..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதி மக்கள் தங்கியுள்ள அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 11ஆம் தேதி நள்ளிரவு முதல் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்தது.
தொடர் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளக்காடாக மாறியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முதலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசித்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
42அரசுப் பள்ளிகளில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் மழைநீரால் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதால் 56 அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட 93 அரசு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.






