--- --:--:-- --

மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது..!

5

வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ஏற்கனவே ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அளவில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் மண்டலத் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது எனவும் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திர தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நெருங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் இன்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா வடதமிழகம் ஒட்டியுள்ள பகுதிகளில் காற்று திசை மாறும் பகுதி நிலவுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon