திருமணம் குறித்து பேசிய நடிகை பூஜா ஹெக்டே..!
கோலிவுட், டோலிவுட் என பிஸியான நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே சமீபத்தில் அளித்த பேட்டியில் திருமணம் குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய பூஜா திருமணம் வயது வந்துவிட்டது என்பதற்காகவோ அல்லது திருமணம் செய்து கொள்ள இதுதான் சரியான நேரம் என்பதற்காகவோ திருமணம் செய்து கொள்வது கண்டிப்பாக சரியல்ல என்று கூறியுள்ளார்.
வாழ்க்கையெல்லாம் சேர்ந்திருக்க முடியும் என ஒரு மனிதருடன் இருக்கும் பொழுது தோன்றும் போது அப்பொழுது அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் அவர் தான் வாழ்க்கைக்கு நல்ல கணவராக இருப்பார் என கூறியுள்ளார்.






