கொரோனா சிகிச்சைக்காக தனி மருத்துவமனை..!
புதுச்சேரியில் கொரொனா சிகிச்சைக்காக தனி மருத்துவமனை கட்டும் பணி தொடங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். தேசிய தன்னார்வ ரத்த தான மாத விழா, இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அந்த மாநில முதலமைச்சர் ரங்கசாமி இரத்ததான செய்த தன்னார்வலர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
அப்போது பேசிய அவர் புதுச்சேரியில் சிகிச்சைக்காக புதிய மருத்துவமனை கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும் இதற்காக மத்திய அரசிடம் நிதி கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.






