--- --:--:-- --

வெள்ளத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்..!

8

ந்திராவில் சொர்ணமுகி நகரில் வெள்ளத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் பத்திரமாக மீட்டனர். திருப்பதி சித்தூர் அடுத்த சந்திரகிரி பகுதியில் நதிக்கரை ஓரம் ராஜசேகர் என்பவர் மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் குடிசை கட்டி வசித்து வருகின்றனர்.

 

தொடர் கனமழை காரணமாக ஏரி, குளம், ஆறு அனைத்தும் நிரம்பி வழிய சொர்ணமுகி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் கரையோரம் உள்ள ராஜசேகர் குடிசையும் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டது.

 

தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்கள் உள்ள கரையில் இருந்து கயிறு கட்டி அரை மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர். போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Right Menu Icon