--- --:--:-- --

ஆப்கானிஸ்தானில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 10 லட்சம் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும்..!

9

ப்கானிஸ்தானில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 10 லட்சம் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஆப்காணிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

 

ஆப்கானிஸ்தானில் கடுமையான உணவுப் பஞ்சம் மற்றும் சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முப்பத்தி இரண்டு லட்சம் குழந்தைகள் வருங்காலத்தில் ஊட்டச் சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

 

இதே நிலை தொடர்ந்தால் ஊட்டச்சத்து குறைபாட்டால் 10 லட்சம் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.

Right Menu Icon