நோயாளிகளை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் பள்ளத்தில் சிக்கியது..!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மேல் சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் சிக்கிக் கொண்ட நிலையில் பொது மக்களே ஒன்று சேர்ந்து ஆம்புலன்சை மீட்டனர்.
செங்கத்தில் இருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை அழைத்துக்கொண்டு ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது காண கவுண்டன் புதூர் அருகே ஆம்புலன்ஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் தேங்கியிருந்த சாலையோர பள்ளத்தில் சிக்கியதை அறிந்த அந்த பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து கயிறு கட்டி ஆம்புலன்சை மீட்டனர்.
அதிலிருந்து இரண்டு நோயாளிகளையும் வேறு ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சில் நோயாளிகளை அழைத்துக்கொண்டு வேகமாக செல்லும் பொழுது மழையால் சாலை ஈரமாக இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் பள்ளத்தில் சென்றதாக கூறப்படுகிறது.






