38 வயதில் திருமணம் செய்த பிரபல நடிகை..!
தமிழ் மற்றும் மலையாளப் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சந்திரா லக்ஷ்மன் லோஸ் கிரிஸ்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தமிழில் ஸ்ரீகாந்தின் மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சந்திரா லக்ஷ்மன். மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.
சந்திரா லக்ஷ்மன் 35 வயதில் திருமணம் செய்துகொள்ள இருந்தார். ரசிகர்கள் அவரிடம் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேள்வி எழுப்பி இருந்தனர். சமீபத்தில் தொலைக்காட்சி தொடர்களில் சேர்ந்து நடித்த வரை திருமணம் செய்ய இருப்பதாக தெரிவித்து திருமணஇருந்தார்.
இந்த நிலையில் கேரளாவில் இவர்களின் திருமணம் நடந்தது. இதனையடுத்து இருவருக்கும் திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.







