--- --:--:-- --

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது..!

4

அந்தமானில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தமிழகத்தின் 3 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பொழிந்து உள்ளது. இந்த நிலையில் அந்தமானில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதன் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கும், அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

 

குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon