கூட்டுப் பலாத்கார வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு ஆயுள் தண்டனை..!
கூட்டு பலாத்கார வழக்கில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் காயத்ரி பிரஜாபதிக்கு ஆயுள் தண்டனையும் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் காயத்ரி பிரஜாபதி, இவர் சித்தரகுள் என்ற இடத்தில் சுரங்கத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண் ஒருவரையும் அவரது மகளையும் கூட்டு பலாத்காரம் செய்ய முயன்றதாக கடந்த 2017 ஆம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து மாநில போலீசார் வழக்கு பதிவு செய்யாத நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதி, அசோக் திவாரி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






