--- --:--:-- --

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி..!

1

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை இன்று கொண்டாடியுள்ளார். நரேந்திர மோடி 2014ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றது முதல் ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி வருகிறார்.

 

கடந்த ஆண்டு ராஜஸ்தானில் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்ற மோடி இராணுவத்தினருடன் தீபங்களை ஏற்றினர். இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் பிரதமர் மோடி ராணுவத்தினருடன் தீபாவளி நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருப்பார்.

 

இதனையடுத்து விழா நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன பிரதமர் மோடியின் பயணம் ராணுவத்தினருக்கும் உற்சாகம் அளிப்பதாக உள்ளது என்றும், எந்த அச்சுறுத்தலுக்கும் இந்தியா அஞ்சாது என்பதை உலக நாடுகளுக்கு தெரியபடுத்துவதாக இருக்கும் என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

 

பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி ஜம்முவுக்கு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon