--- --:--:-- --

மாடியில் இருந்து தவறி விழுந்து சுயநினைவை இழந்த 5 வயது சிறுவன்..!

7

திருப்பத்தூர் அருகே வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து சுயநினைவை இழந்த 5 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சின்ன குடிசை கிராமத்தை சேர்ந்த சிறுவன் வீட்டு மாடியில் பக்கவாட்டு சுவர் பிடித்தவாறு கீழே எட்டிப் பார்க்க முயன்ற பொழுது கால் இடறிக் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

 

இதில் தலையில் அடிபட்டு சுயநினைவை இழந்த குழந்தையை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கும் பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Right Menu Icon