--- --:--:-- --

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய காவலர் ..!

8

திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய சுகாதார பணியாளரை ஏமாற்றிய காவலரை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் இலவங்காய் குடி கிராமத்தில் வசித்து வருபவர் காவலர் சதீஷ்.

 

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு பணிக்காக சென்ற பொழுது அங்கு ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய பெண் ஊழியருடன் சதீஷ்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் கேட்டதற்கு காவலர் மறுப்பு தெரிவித்ததையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon