--- --:--:-- --

இடுக்கி அணை இன்று திறப்பு..!

6

னமழை காரணமாக வேகமாக நிரம்பி வரும் இடுக்கி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்த கனமழையால் இடுக்கி, முல்லைப் பெரியாறு, ஆலப்புழா உள்ளிட்ட அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

 

இடுக்கி அணையின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 2,403 அடியாகவும் இந்த அணையின் நீர்மட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் 2394 அடியை எட்டியது. இதனையடுத்து முதல் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து 2396 அடி உள்ளதால் இன்று அணைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும்.

 

காலை பதினோரு மணி அளவில் தண்ணீர் திறக்கப்படும் என நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இதனால் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon