மது அருந்த பணம் கொடுக்காததால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்..!
கடலூரில் ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் ஒருவரை மதுப்பழக்கத்திற்கு அடிமையான மகனே அடித்துக் கொலை செய்துள்ளார். ஆனக்குப்பம் பகுதியில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன். ஓய்வு பெற்று அவருடன் மகன் கார்த்திக்கும் அங்கு வசித்துள்ளனர்.
கார்த்திக் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. மது அருந்துவதற்காக பணம் கேட்டு தந்தையுடன் தினமும் சண்டையிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தனது தந்தை தூங்குகிறார் என்றும் பார்த்துக் கொள்ளுமாறு பக்கத்து வீட்டுக்காரரிடம் கூறிவிட்டு கார்த்திக் வெளியே சென்றுள்ளார்.
ஆனால் வீட்டின் அருகே பலத்த காயங்களுடன் சுப்பிரமணியர் கிடந்ததைக் கண்டு காவல்துறையினரை வரவழைத்துள்ளார். அங்கு சென்ற காவல்துறையினர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சுப்பிரமணியம் உடலை மீட்டனர். வீடு முழுவதும் காலி மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
காலியாக இருந்த ஸ்ப்ரைட் பாட்டில்களும் ஏராளமாகக் கிடந்தன. குடிக்க பணம் கேட்டு வழக்கம்போல சுப்பிரமணியனுடன் தகராறு செய்த தந்தையை அடித்துக் கொன்றது தெரிய வந்துள்ளது.
மது அருந்த வேண்டும் என்ற அவசரத்தில் அந்த கார்த்திக் தனது தந்தை தூங்குவதாக எண்ணி பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறிவிட்டு வெளியே சென்றதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






