--- --:--:-- --

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5,000 நிதியுதவி..!

2

கொரொனாவால் உயிரிழந்தவர்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் மூன்று ஆண்டுக்கு வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக முதலமைச்சர் பினராய் விஜயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கொரொனாவால் உயிரிழந்தவர்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் எனவும் அரசின் சமூக நலத் திட்டம், நலத்திட்ட உதவி மற்றும் பிற ஓய்வூதியங்களைப் பெற்றால் இந்த திட்டத்தின் கீழ் பணம் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கேரளாவை சேர்ந்த நபர் கேரளாவிலோ, பிற மாநிலங்களிலும், வெளிநாட்டிலும் உயிரிழந்தால் அவரது குடும்பத்தினர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon