வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் தற்கொலை..!
கோவை அருகே வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் ராம் பிரசாத் என்பவருக்கும் இலக்கியா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
அப்பொழுது வரதட்சணையாக 100 சவரன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள், சொகுசு கார், இருசக்கரவாகனம் உள்ளிட்டவை பெண் வீட்டார் மூலம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பணம் கேட்டு கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாக இலக்கியா அடிக்கடி பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அந்த நிலையில் இலக்கியா தற்கொலை செய்து கொண்டதாக ராம்பிரசாத் தகவல் கொடுத்திருக்கிறார். இதையடுத்து போலீசார் இலக்கியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இலக்கியாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இலக்கியா மரணம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.






