--- --:--:-- --

பிக்பாஸ் போட்டியாளர் நமீதா வெளியேறியதற்கு காரணம் இதுதானா..?

2

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் இருந்து கொரொனா காரணமாக போட்டியாளர் ஒருவர் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. நமீதா மாரிமுத்து என்ற திருநங்கை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகியதையடுத்து கொரொனா தொற்று காரணமாக கூறப்படுகிறது.

 

கடந்த வாரம் திருநங்கைகள் படும் துயரத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்ணீர் மல்க நமிதா மாரிமுத்து பேசியிருந்தார். இதனை அடுத்து பார்வையாளர்கள் மட்டுமின்றி இணையவாசிகளிடமும் நமிதா மாரிமுத்து ஆதரவு பெருகியது.

 

இந்த நிலையில் அவர் நிகழ்ச்சியில் இருந்து விலகியதால் பார்வையாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. முதலில் மனஅழுத்தம் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப் பட்டதாக கூறப்பட்டதை அடுத்து தற்பொழுது கொரொனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

 

மேலும் பிக்பாஸ் வீட்டில் உள்ள பிற போட்டியாளர்களையும் தனிமைப்படுத்த தொலைக்காட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon