--- --:--:-- --

வீடுகளை வாங்கி குவிக்கும் ராஷ்மிகா மந்தனா..!

3

தமிழில் கார்த்திக்கிற்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா தான் சம்பாதிக்கும் பணத்தில் வீடுகளாக வாங்கிக் குவிக்கிறார். கோவாவில் புதிதாக வாங்கிய வீட்டில் நீச்சல் குளத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருந்தார்.

 

இதுபோல் ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களிலும் வீடு வாங்கியிருக்கிறார். இது குறித்து பேசிய ராஷ்மிகா தான் எந்த பகுதியில் நடித்தாலும் அங்கு ஹோட்டலில் தங்குவதை நான் விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டார்.

 

மேலும் நிறைய நாட்கள் படப்பிடிப்பிற்காக வெளியூரில் தங்கும் போது அது சொந்த வீடாக இருந்தால் நன்றாக இருக்கும் எனவும் அது தவிர தனக்கு ஒரு தங்கை இருக்கிறார் எனவும் அவளை விட்டு அதிக நாட்கள் பிரிந்திருக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

 

சொந்த வீடாக இருந்தால் பிரச்சினை இருக்காது என்றும் தான் பல இடங்களில் வீடு வாங்கி வைத்திருப்பதாகவும் தெலுங்கு படங்களில் நடித்த போது ஹைதராபாத்திலும், ஹிந்தி படங்களில் நடித்தபோது மும்பையிலும் வீடு வாங்கி இருப்பதாக தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon