--- --:--:-- --

திருமணத்திற்காக தொடங்கப்பட்டுள்ள இலவச ஆடை வங்கி..!

4

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்காக இலவச ஆடை வங்கி தொடங்கப்பட்டுள்ளது. திருமணத்திற்காக வாங்கப்படும் பெரும்பாலான ஆடைகள் பல ஆண்டுகளாகியும் பயன்படுத்துவதில்லை.

 

இந்த ஆடைகளை ஏழை பெண்களின் திருமணத்திற்கு தானமாக வழங்கலாம் என கேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்த நாசர் என்பவருக்கு எண்ணம் தோன்றியது. இதனையடுத்து தனது மனைவி மற்றும் குடும்பத்தாரின் ஆடைகளை வைத்து இலவச ஆடை வங்கியைத் துவக்கினார்.

 

இங்கு பெண்கள் தங்களுடைய திருமணத்திற்காக ஆடைகளை பெற்றுக்கொள்ளலாம். திருமணம் முடிந்தபின் திருப்பிக் கொடுத்துவிடலாம் அல்லது அவர்களை வைத்துக் கொள்ளலாம். இந்த வங்கிகளுக்கு முதலில் மக்கள் வர தயங்கினாலும் தற்போது அதிகளவில் பெண்கள் இலவசமாக ஆடைகளை எடுத்து செல்கின்றனர்.

 

அதேபோல் மக்கள் பலரும் ஆடைகளை வழங்கி வருகின்றனர். இளைஞர் நாசரின் இந்த முயற்சி ஏழை பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon