இந்துக்களை குறிவைத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல்..!
ஜம்மு காஷ்மீரில் இந்துக்களை குறிவைத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது அண்மைக் காலத்தில் அதிகம் உள்ள நிலையில் உள்ளூர் இளைஞர்கள் 300 பேரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தாக்குதலின் ஈடுபட்டவர்களில் குறைந்தது ஆறுபேருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இத்தகைய தாக்குதலுக்கு 100 இளைஞர்களை பணத்தாசை வைத்து வளைத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் செல்ல திட்டமிட்டுள்ள நிலையில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் குறிவைத்து தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்களை முறியடிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.






