--- --:--:-- --

ஜவ்வரிசியில் ரசாயனம் கலப்படம் செய்யப்படுகிறதா..?

8

வ்வரிசியில் ரசாயனம் கலப்படம் செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உணவு பாதுகாப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலப்பட ஜவ்வரிசி விற்பனையை தடை செய்ய நடராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

விசாரணை நீதிபதி சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. ரசாயன கலப்படம் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் உற்பத்தியாளர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் ஒன்பது வகையான பரிசோதனைகளுக்கு பிறகு விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது என்று விளக்கமளித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜவ்வரிசியில் கலப்படம் செய்யப் படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

 

தமிழக அரசு உணவு பாதுகாப்பு துறை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Right Menu Icon