--- --:--:-- --

டிரைவரை துப்பாக்கியால் சுட முயன்றபோது மகனையை சுட்ட தொழிலதிபர்..!

7

ங்களூருவில் சம்பள பாக்கியை கேட்டு தகராறு செய்தவர்களை தொழிலதிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார். அப்போது தொழிலதிபரின் மகன் மீது குண்டு பாய்ந்தது. படுகாயமடைந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

மோர்கன்ஸ்கேட் பகுதியை சேர்ந்த ராஜேஷ் பாபு அந்த பகுதியில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். ராஜேஷ் பாபு தன்னிடம் வேலை செய்து வரும் டிரைவர் மற்றும் கிளீனர்களுக்கு சரியாக சம்பளம் வழங்கவில்லை என்று தெரிகிறது.

 

ராஜேஷ் டிரைவர், கிளீனர்களுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. அலுவலகத்தில் இருந்தபோது ஒரு டிரைவரும், கிளீனரும் சம்பளம் பாக்கி கேட்டு தகராறு செய்துள்ளனர். அப்பொழுது துப்பாக்கியால் தொழிலதிபர் சுட்டதில் அந்த குண்டு மகன் மீது பாய்ந்துள்ளது. மகன் பரிதாபமாக மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.

Right Menu Icon