--- --:--:-- --

ஆர்யன்கான் போனில் சிக்கிய முக்கிய தகவல்கள்..!

2

மும்பை அருகே சொகுசு கப்பலில் போதைப்பொருள் சிக்கிய விவகாரத்தில் கைதான நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் விசாரணையில் போதை விருந்து எதற்காக நடத்தப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

கைப்பற்றப்பட்ட ஆர்யன்கானின் மொபைல் போனில் இருந்து போதைப்பொருள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கண்டறியப்பட்டதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மும்பை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்ததால் தொடர் விசாரணை அவசியம் என நீதிமன்றத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரிக்கவில்லை எனில் அதன் சப்ளையர்கள் மற்றவர்களை கண்டறிவது கடினம் என்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கூறுகின்றனர்.

 

இதனை ஏற்று நீதிபதி தொடர் விசாரணை நடத்தி அவர் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்கலாம் என கூறியுள்ளார். விசாரணை காவலை வரும் 7ம் தேதி வரை நீட்டித்து உள்ளார்.

Right Menu Icon