தன்னை கருணைக் கொலை செய்யக் கோரி மனு அளித்த மூதாட்டி..!
மயிலாடுதுறையில் 97 மூதாட்டி வீட்டை விட்டு விரட்டப்பட்ட நிலையில் தன்னை கருணைக்கொலை செய்யக்கோரி அவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை அருகே உள்ள பாரதிராஜா புரத்தை சேர்ந்தவர் தாவூத். இவர் தனது மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் இளைய மகன் வெளிநாடு சென்றார். இதனால் மருமகள் அவரை கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற கூறியுள்ளார். இதை அடுத்து அதே ஊரில் வசித்து வரும் தனது பெரிய மகளிடம் மூதாட்டி சென்ற நிலையில் அவரும் விரட்டியுள்ளார்.
ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் துரத்துவதால் மனமுடைந்த மூதாட்டி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தன்னை கருணை கொலை செய்து விடுங்கள் என்று கூறியுள்ளார். இதைக்கேட்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக மயிலாடுதுறை ஆர்டிஓவை தொடர்பு கொண்டு அவரை மூத்த மகள் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
மேலும் குடும்பத்தாரை அழைத்து நிரந்தர தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.







