கொரொனா தடுப்பூசிக்கு பதிலாக நாய் ஊசி போட்ட அதிர்ச்சி சம்பவம்..!
மகாராஷ்டிராவில் கொரொனா தடுப்பூசி போட சென்றவருக்கு தவறுதலாக வெறிநோய் தடுப்பூசி செலுத்தி விட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே நகராட்சிக்குட்பட்ட சுகாதார மையத்தில் கொரொனா தடுப்பூசி முகாம் செயல்பட்டு வருகிறது.
இதில் ராஜ்குமார் என்பவர் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள சென்று இருந்தார். அப்போது அங்கு ஒரு இடத்தில் வரிசை நிற்பதை பார்த்து தடுப்பூசி செலுத்துவதற்கான வரிசை என நினைத்துள்ளார்.
அவர் தடுப்பூசி செலுத்திய பிறகு தான் அந்த வரிசை வெறிநாய் ஊசி செலுத்தியதற்கான வரிசை என தெரியவந்தது. கவனக்குறைவாக செயல்பட்ட செவிலியரை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.






