--- --:--:-- --

சட்டமன்ற உறுப்பினரை காணவில்லை என போஸ்டர் ஒட்டிய பொது மக்கள்..!

10

நெல்லை அடுத்து நாங்குநேரியில் எம்எல்ஏவை காணவில்லை என்று எழுதப்பட்டுள்ள வாசகம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரூபி மனோகரன்.

 

தமிழகத்தில் முன்னணி தொகுதியாக மாற்றுவேன் எனக் கூறியுள்ளார். மாநகர போக்குவரத்து பிரச்சினை குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறியுள்ளனர்.

 

இந்தநிலையில் நாங்குநேரியில் வில்லுக்கு விஜயன், சொல்லுக்கு அரிச்சந்திரன், சொன்ன சொல்லை தவறவிட மாட்டார் என்று வாக்குறுதி கொடுத்த மனோகரனை காணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து தருபவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

 

எம்எல்ஏவை காணவில்லை என்று எழுதப்பட்டு உள்ள வாசகம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon