--- --:--:-- --

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியர் கைது..!

11

புதுக்கோட்டையில் பள்ளி மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனியார் பள்ளி ஆசிரியர் சண்முகநாதனை போலீசார் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 

புதுக்கோட்டையில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த பள்ளி மாணவிக்கு அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவரை பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.

 

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்து தற்பொழுது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 15 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon