--- --:--:-- --

6 மாத கருவை கலைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது..!

3

பாலியல் வன்கொடுமையால் ஏற்பட்ட கரு, குறைபாடுள்ள கரு ஆகியவற்றை கலைப்பதற்கான உச்சவரம்பு காலத்தை இருபத்தி நான்கு வாரங்களாக உயர்த்தி ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ளது. புதிய சட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.

 

ஒரு பெண்ணுக்கு மருத்துவ காரணங்கள், உயிருக்கு ஆபத்தான சூழலில் கருவிலிருக்கும் குழந்தை குறைபாடுகளுடன் இருந்தாலோ பாலியல் வன்கொடுமை போன்றவற்றால் ஏற்பட்ட கர்ப்பமாக இருந்தாலும் அதை 20 வாரங்களுக்கு கருக்கலைப்பு செய்யலாம் என மருத்துவ கருக்கலைப்புச் சட்டம் கூறுகிறது.

 

இந்த நிலையில் சட்டத்தை திருத்தும் சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு நிறைவேற்றியது. அதன்படி கருவைக் கலைப்பதற்காக கால உச்சவரம்பு இருபத்தி நான்கு வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

20 வாரங்கள் வரையிலான கருவை கலைக்க ஒரு மருத்துவரின் ஆலோசனையை போதுமானது. 20 முதல் 24 வரையான கருவை கலைக் 2 கமருத்துவர்கள் ஆலோசித்து முடிவு செய்ய முடியும். இந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து இருப்பதால் இந்த புதிய கருக்கலைப்பு சட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon