மது பாட்டிலுடன் ஆட்டம் போட்ட நடிகை அமலாபால்..!
நடிகை அமலாபால் பேச்சிலர் பார்ட்டியில் கையில் மது பாட்டிலுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அமலாபால் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டில் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். தற்போது அமலாபாலின் சகோதரர் திருமணம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பேச்சுலர் பார்ட்டி நடந்துள்ளது.
அதில் பங்கேற்ற அமலா பால் அவருடைய சகோதரர் மற்றும் அவரது காதலி உள்ளிட்டோருடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டே குத்தாட்டம் போடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.






