தமிழகத்தில் 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
வெப்பச்சலனம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கன மழையும், மேற்குத் தொடர்ச்சி மழையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக மழை பெய்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





