--- --:--:-- --

சுரங்கப் பாதையில் தேங்கி இருந்த மழை நீரில் மூழ்கி மருத்துவர் உயிரிழப்பு..!

6

புதுக்கோட்டை அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் காரில் சென்ற அரசு மருத்துவர் தேங்கியிருந்த மழை நீரில் சிக்கி உயிரிழந்துள்ளார். ஓசூரில் அரசு மருத்துவராகப் பணியாற்றிய சத்யா மற்றும் அவருடைய மாமியார் கார் மூலம் சொந்த ஊருக்கு சென்றனர்.

 

பலத்த மழை காரணமாக ரயில்வே சுரங்க பாதையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி இருந்துள்ளது. இதை அறியாமல் காரின் மூலம் கடக்க முயன்றபோது சிக்கிக்கொண்டதால் இருவரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.

 

தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காரை உடைத்து இருவரையும் மீட்டனர். அதில் சத்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon