--- --:--:-- --

கே.சி.வீரமணிக்கு நெருக்கமான ராம ஆஞ்சனேயலு வீட்டில் சோதனை..!

5

முன்னாள் அமைச்சர் கே சி வீரமணியின் தொழில் பங்குதாரரான தொழிலதிபர் ஆஞ்சநேயலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 4 மணி நேரம் சோதனை நடத்தினர்.

 

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி மற்றும் அவருக்கு நெருங்கிய நபர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

 

அதனடிப்படையில் கே.சி வீரமணி உடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் தொழிலதிபர் ஆஞ்சநேயலு அண்ணா நகர் மற்றும் சூளைமேடு வீடுகளை சோதனை செய்தபோது வீடுகள் பூட்டப்பட்டிருந்தன. அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு சோதனைக்கு ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுத்தும் அவர் ஒத்துழைக்காததால் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வீடுகளுக்கு சீல் வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.

 

இந்த நிலையில் அண்ணாநகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். ராம ஆஞ்சநேயலுவையும் நேரில் வரவழைத்து வீடு முழுவதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சுமார் 4 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர்.

 

முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி நெருக்கமானவர்களின் முக்கிய நபராக கருதப்படும் ராம ஆஞ்சநேயலுவின் வீட்டில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon