--- --:--:-- --

தமிழகத்தில் தற்கொலையை தடுக்கும் விதமாக சாணி பவுடருக்கு தடை..!

3

தற்கொலையை தடுக்கும் விதமாக தமிழகத்தில் சாணி பவுடர் தயாரிப்பாளர்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அமைச்சர் சுப்பிரமணியன் விழிப்புணர்வு முகாம் நடத்தினார். அதைத்தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் அமைக்கப்பட்ட தோட்டங்களில் பயிரிடப்பட்ட காய்கறிகளை பார்வையிட்டார்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தற்கொலையை தடுக்கும் விதமாக பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலைகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பால் பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் கொரொனா இல்லை என நினைக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon