மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவர்..!
மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் கணிமொழி. இவரின் கணவர் சுப்பிரமணி கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி மூன்று வயது ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். தன்னுடன் வருமாறு சுப்பிரமணி அழைத்த போதிலும் இருவருக்குமிடையே சண்டை அடிக்கடி நடந்து வந்துள்ளது.
மாமியார் வீட்டிற்கு சென்ற மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த பின்னர் நடந்ததை கூறி அவரை காவல் நிலையத்தில் சரணடைந்தார். விசாரணையில் மனைவியின் மீதான சந்தேகத்தால் கொலை நடந்தது தெரியவந்தது.






