--- --:--:-- --

தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த கணவருக்கு உதவிய அக்கா..!

5

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் உடந்தையாக இருந்ததாக அவரது மனைவியையும் கைது செய்துள்ளனர்.

 

திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தையல் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறுவதற்காக கடந்த ஜூன் மாதம் சங்கராபுரம் பகுதியில் அவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

அக்காவிற்கு திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் தனது கணவருக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைக்க எண்ணிய நிலையில் கணவன் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

 

இது குறித்து சிறுமி பெற்றோருக்கு தெரிவித்த நிலையில் அவர்கள் சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் கணவனை கைது செய்த போலீசார் அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் அக்காவையும் கைது செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon