தனது மகன் கையால் தாலி வாங்கி மறுமணம் செய்து கொண்ட பெண்..!
மதுரையில் விவாகரத்து பெற்ற கல்லூரி பேராசிரியை தனது 9 வயது மகன் கையால் தாலி வாங்கி மறுமணம் செய்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசியை சேர்ந்த ஆங்கில பேராசிரியர் சுபாஷினி கணவரை பிரிந்து சட்டப்படி விவாகரத்து பெற்று விட்டார்.
அவருக்கு ஒன்பது வயதில் தர்ஷன் என்ற மகனும் உள்ளார். சுபாஷுக்கு திருமங்கலத்தை சேர்ந்த ஓவியர் ஆதிச் என்பவருடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாற இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இருவரும் நேற்று திருமங்கலத்தில் உள்ள பெருமாள் கோயிலில் நண்பர்கள் முன்னிலையில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். மணமகனுக்கு சுபாஷினியின் மகன் தர்ஷன் தாலியை எடுத்துக் கொடுத்தான். பின்னர் மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டனர்.






