பிரபல நடிகர் சாய் தரன் தேஜ் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி..!
ஹைதராபாத்தில் அதிவேகமாக ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்ற பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரன் தேஜ் விபத்தில் சிக்கியுள்ளார். பலத்த காயங்களுடன் சுயநினைவை இழந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகன் சாய் தரன் தேஜ். பத்துக்கு மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் நேற்று இரவு ஹைதராபாத்தில் உள்ள கேபிள் பாலத்தில் தனது ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்றில் அதிவேகமாக சென்றுள்ளார்.
அப்பொழுது நிலைதடுமாறி விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த அவர் சுயநினைவை இழந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக கூறப்படுகிறது. சாய் தரன் தேஜ் விரைவில் குணமடைய வேண்டுமென தெலுங்கு திரையுலகினர் டுவிட்டரில் விருப்பம் தெரிவித்துள்ளனர்.






