அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது..!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




