துணிக்கடையில் கைவரிசை காட்டிய நபரின் வீடியோ வைரல்..!
திசையன்விளையில் நூதன முறையில் துணிக்கடையில் கைவரிசை காட்டிய நபரின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பகுதியில் உள்ள துணிக்கடைக்கு வந்த செல்வம் என்ற இளைஞர் டீ சர்ட்டை திருடியுள்ளார்.
துணிகளை எல்லாம் எடுத்து சென்று ஒன்றன் மேல் ஒன்றாகப் போட்டுக் கொண்டு வெளியே வந்துள்ளார். அவரின் நடவடிக்கையில் மாற்றம் தெரியவே கடையில் இருந்தவர்கள் அவரை பிடித்து விசாரித்தனர்.
அப்பொழுது ஒன்றன் மேல் ஒன்றாக துணி அணிந்து இருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த இளைஞரிடம் இருந்து துணிகளை எல்லாம் பறிமுதல் செய்த கடை உரிமையாளர் கைவரிசை காட்டிய இளைஞரை எச்சரித்து அனுப்பினார்.






