--- --:--:-- --

மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

4

மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

இந்த நிலநடுக்கம் மெக்சிகோ நகர் வரை கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியதாக நில அதிர்வு நிபுணர்கள் மற்றும் அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் இதனால் அங்கு மின் தடை மற்றும் எரிவாயு கசிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உறுதியான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 8.47 மணிக்கு ஏற்பட்டது.

 

கடற்கரையில் உள்ள ஒரு நகரம் மற்றும் முக்கிய துறைமுகமாக இருந்தது. இந்தப் பகுதி மெக்சிகோ நகரத்திற்கு தெற்கு 240 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon