ரீ என்ட்ரி கொடுக்கப் போகிறாரா நடிகை கனகா..!
கரகாட்டக்காரன் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை கனகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான கனகா 1989ஆம் ஆண்டு வெளியான கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் கடைசியாக 1999 இல் வெளியான விரலுக்கேத்த வீக்கம் படத்தில் நடித்து பின் சினிமாவை விட்டு விலகினார்.
இந்த நிலையில் தான் வெளியிட்டுள்ள வீடியோவில் நான் நடித்து 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. சில காரணங்களால் நடிக்கவில்லை.ஆனால் தற்போது மீண்டும் நடிக்க ஆர்வம் உள்ளதாகவும் சினிமாவில் புதிய அனுபவங்களை கற்று வருகிறேன் எனவும் மன உறுதி இருப்பதால் விரைவில் கற்றுக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.






