--- --:--:-- --

மனவுளைச்சல் காரணமாக சொந்த நாக்கையே அறுத்துக் கொண்ட தொழிலாளி..!

3

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மனவுளைச்சல் காரணமாக தன்னுடைய சொந்த நாக்கையே கட்டிட தொழிலாளி ஒருவர் அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வசந்த்நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்.

 

கட்டிட தொழிலாளியான இவருக்கு மனைவி ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் சில தினங்களாக முருகேசன் மன உளைச்சலில் இருந்ததால் யாரும் பேசாமல் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த சூழலில் இன்று காலை திடீரென முருகேசன் தனது நாக்கை கத்தியால் வெட்டி கொண்டதாக சொல்லப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகேசனின் மகன் துண்டாக்கிய நாக்கை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.

 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நாக்கை இணைக்க முடியாது எனவும் இருப்பினும் பேசுவதற்கு பிரச்சனை இல்லை எனவும் தெரிவித்துள்ளதாக குடும்பத்தார் தரப்பில் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon